பி.எட் ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி , மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நடந்த , பி . எட் ., படிப்புக்கான தேர்வு முடிவுகள் , பல்கலை இணையதளமான , www.tnteu.in ல் , வெளியிடப்பட்டுள்ளன . மதிப்பெண் பட்டியல் , தற்காலிக சான்றிதழ் ஜூலை, 30 ம் தேதிக்குப் பின், கல்லுாரிகள் வழியே வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற, தனித்தனி விண்ணப்பங்களை , ஜூலை , 24 ம் தேதிக்குள் , தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் . விண்ணப்பப் படிவங்களை , இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Pingbacks and trackbacks (1)+

Loading