ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-2016 - செய்திகள், அரசாணைகள், செயல்முறைகள், விண்ணப்பங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியல்


  1. NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - திருத்தம் ஆணை.(AVAILABLE)

  2. NORMS | 2014-2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2014-2015-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)

  3. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)

  4. DEE FORM | தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)

  5. PROMOTION PANEL 2015-2016 (BT TO PGT (TAMIL) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16 (FINAL) | BT TO PGT (ENGLISH-SM/CM) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16 (FINAL))

  6. DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 (AVAILABLE)

  7. DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 ((AVAILABLE)

  8. தலைமையாசிரியர் பொறுப்பு ஒப்படைப்பு, பொறுப்பு ஏற்றல் படிவம். 

  9. LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL. (LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 1 | LAST PAY CERTIFICATE (LPC) FORM MODEL 2)

  10. பள்ளிப் பணியில் இருந்து விடுவித்து அனுப்ப மாதிரி விண்ணப்பம்

பி.எட் ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி , மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் நடந்த , பி . எட் ., படிப்புக்கான தேர்வு முடிவுகள் , பல்கலை இணையதளமான , www.tnteu.in ல் , வெளியிடப்பட்டுள்ளன . மதிப்பெண் பட்டியல் , தற்காலிக சான்றிதழ் ஜூலை, 30 ம் தேதிக்குப் பின், கல்லுாரிகள் வழியே வழங்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற, தனித்தனி விண்ணப்பங்களை , ஜூலை , 24 ம் தேதிக்குள் , தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் . விண்ணப்பப் படிவங்களை , இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பி.எட்., படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு

நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், செப் 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர்
சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 


Hard Disk (ஹார்டு டிஸ்க்)

நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.
ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.

நாமாக ஏற்படுத்தும் சேதம்: ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க்கில் தான், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்?
கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இட த்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.அதிக வெப்பம்:
ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும்.
நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது.
இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், கு��ைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.

சிதறியபடி பதியப்படும் பைல்கள்: பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும்.
இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.
இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு.
டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும்.
அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்
ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும்.
இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது.

குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.

மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு: மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும்.
கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலி ருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்? சர்ஜ் ப்ரடக்டர் (surge protector) என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.

1.1. Etymology of Computer

1.1. Etymology of Computer
          கணினியின் சொல்லிலக்கணம்

1.1.1. What is Computer?
           கணினி என்றால் என்ன?
Computer is an Information Processing and Electronic Machine.
கணினி என்பது தகவலினை செயலாக்கம் செய்யும் ஓர் மின்னணு இயந்திரமாகும்”
1.1.1.1. Information Processing [தகவல் செயலாக்கம்]

Information Processing is an event of processing data and converted to information.

தகவல் செயலாக்கம் என்பது தகவல்களை செயல்படுத்தும் நிகழ்வே ஆகும்.

1.1.1.1.1. Preview [முன்னோட்டம்]

Data -> Processing -> Information

தகவல்கள் -> செயலாக்கம் -> இறுதி செய்யப்பட்ட / முடிவு காணப்பட்ட தகவல்கள்

1.1.1.2. Electronic Machine [மின்னணு இயந்திரம்]

Electronic Machine is made up By connecting Electronic Devices to form a machine to perform a task, or a job.

மின்னணு இயந்திரம் என்பது மின்னணு கருவிகளுக்கிடையே இயந்திர நுட்பத்தின் அடிப்படையில் பணியினை செய்யும் அமைப்பாகும்.

1.1.1.2.1. Preview [முன்னோட்டம்]

1.1.1.3. Abbreviations of Computer [கணினியின் விரிவாக்கம்]

Common Operating Machine Particularly Used for Trade, Education, and Research.

வணிகம், கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளுக்கு பயன்படும் பொதுவான இயக்கமைப்பு இயந்திரமாகும்.

1.1.1.4. Proverbs of Computer [கணினியின் அருஞ்சொற்கள்]

1.1.1.4.1. Proverb 1 [அருஞ்சொல் 1]

Computer is an electronic device which is capable of receiving information (data) in a particular form and of performing a sequence of operations in accordance with a predetermined but variable set of procedural instructions (program) to produce a result in the form of information or signals.

கணினி என்பது கொடுக்கப்படும் தகவல்களை பெறும் தன்மையுடன் கூடியதும் அத்தகவல்களை தொடர்ச்சியமைப்பு முறையில் செயல்படுத்தி அதற்கு தீர்வு காணும் ஓர் மின்னணு கருவியாகும்.

- Oxford [ஆக்ஸ்போர்டு]

1.1.1.4.2. Proverb 2 [அருஞ்சொல் 2]

A computer is a general purpose device that can be programmed to carry out a set of arithmetic or logical operations automatically.

கணினி என்பது கணிப்பியல் (அர்த்மேட்டிக்) அல்லது தருக்க முறை (லாஜி்க்) இயக்கமுறைகளை தானியக்க முறையில் செயல்படுத்தும் பொது நோக்கமுள்ள கருவியாகும்.

- Wikipedia [விக்கிபீடியா]