2. History of Artificial Intelligence

2. History of Artificial Intelligence [செயற்கை நுண்ணறிவின் வரலாறு]


முதன்மைக் கட்டுரை: செயற்கை அறிவுத்திறனின் வரலாறு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரம்பணுவியல், தகவல் கோட்பாடு, கட்டுபாட்டியல், சைபர்நெடிக்ஸ் ஆகிய துறைகள் பல புதிய சாத்தியக் கூறுகளை உருவாக்கின. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனின் கணிதவியல் பகுத்தறிதல் செயலைச் செய்யக்கூடிய போன்று உருவாக்கப்பட்ட எண்மிய கணினியின் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்குவதற்கான புதிய அணுகுமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் தேடத் தொடங்கினர்.

நவீன செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சித் துறையானது, 1956 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் டார்ட்மவுத் கல்லூரி வளாகத்தில் நடந்த மாநாட்டில் நிறுவப்பட்டது. இதன் பங்கேற்பாளர்கள் பிற்காலத்தில், பல ஆண்டுகள் செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சியின் தலைவர்களாக இருந்தனர், இதில் ஜான் மெக்கர்த்தி, மார்வின் மின்சிகி, ஆலென் நேவெல் மற்றும் ஹெர்பர்ட் சைமன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள், இவர்கள் மிட், கார்னகி மெலன் மற்றும் இசுடான்ஃபோர்டு ஆகிய இடங்களில் செயற்கை அறிவுத்திறன் ஆய்வுக்கூடங்களை நிறுவினர். இவர்களும் இவர்களது மாணவர்களும் எழுதிய நிரல்கள், பெரும்பாலான மக்கள் வியக்கத்தக்க வகையில் இருந்தன: கணினிகள், இயற்கணிதத்திலுள்ள வார்த்தைச் சிக்கல்களைத் தீர்த்தல், தர்க்கரீதியான தேற்றங்களை நிரூபித்தல் மற்றும் ஆங்கிலம் பேசுதல் ஆகிய செயல்களைச் செய்தன. 60 ஆம் ஆண்டுகளின் மத்தியில், இவர்களது ஆராய்ச்சிக்கு, U.S. பாதுகாப்புத் துறை மிக அதிக அளவில் நிதியளித்தது, மேலும் இதில் ஈடுபட்டவர்கள் பின்வரும் யூகங்களைச் செய்தனர்:

  • 1965, எச். ஏ. சைமன்: "இருபது ஆண்டுகளுக்குள், மனிதனால் செய்யக்கூடிய எந்த வேலையையும் இயந்திரங்கள் செய்யும்".
  • 1967, மார்வின் மின்ஸ்கி: "ஒரு தலைமுறைக்குள் ... 'செயற்கை நுண்ணறிவு' உருவாக்குதலின் சிக்கல்கள் கணிசமாகத் தீர்க்கப்பட்டுவிடும்."

அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட சில சிக்கல்களின் கடுமையைக் கண்டுணரவில்லை. 1974 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் சர் ஜேம்ஸ் லைட்ஹில்லின் திறனாய்வுக்கு மறுவினையாகவும் அதிக உற்பத்தித்திறனுடைய திட்டங்களுக்கு நிதியளிக்குமாறு காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியினாலும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள், சிறந்த இலக்கற்ற மற்றும் விளக்கவியல் சார்ந்த செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சிகள் அனைத்தையும் நிறுத்தின, இது முதல் செயற்கை அறிவுத்திறன் முடக்க காலம் உருவாக வழிவகுத்தது.

1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், expert systems, இன் வர்த்தக வெற்றியால், செயற்கை அறிவுத்திறன் ஆராய்ச்சியானது மீண்டும் உயிரூட்டப்பட்டது, இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனித நிபுணர்களின் அறிவு மற்றும் பகுத்துணரும் திறன் ஆகியவற்றை உருவாக்கக்கூடிய செயற்கை அறிவுத்திறன் நிரலின் ஒரு வடிவமாகும். 1985 ஆம் ஆண்டுக்குள், செயற்கை அறிவுத்திறன் சந்தையானது ஒரு பில்லியன் டாலர்களைத் தொட்டது, இதனால் அரசாங்கங்கள் மீண்டும் நிதியளிக்கத் தொடங்கின.[13] சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1987 ஆம் ஆண்டில் Lisp கணினிச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியதால், செயற்கை அறிவுத்திறன் மீண்டும் மிகத்தாழ்வான நிலைக்குத் தள்ளப்பட்டது, இதனால் இரண்டாம், நீண்டகாலம் நிலைக்கக்கூடிய செயற்கை அறிவுத்திறன் முடக்க காலம் தொடங்கியது.

90 ஆம் ஆண்டுகளிலும் 21 ஆம் நூற்றா���்டின் தொடக்கத்திலும், செயற்கை அறிவுத்திறன் துறை மிக அபாரமான வெற்றிகளை அடைந்தது, இருப்பினும் இது சிறிது காட்சிக்கு எட்டாவண்ணமே இருந்தது. செயற்கை நுண்ணறிவானது, லாஜிஸ்டிக்ஸ், தரவு செயலாக்கம், மருத்துவ அறுதியிடல் மற்றும் தொழில்நுட்ப தொழிற்சாலைகள் முழுவதும் பிற பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிக்கான பல்வேறு காரணிகள்: இன்றைய கணினிகளின் வியக்கத்தகு திறன் (காண்க: மூரின் விதி), குறிப்பிட்ட துணைச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மிகுந்த சிரத்தை, செயற்கை அறிவுத்திறன் மற்றும் இதே போன்ற சிக்கல்களைக் கையாளும் பிற துறைகளுடனான ஒத்துழைப்பு மற்றும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சிறந்த கணிதவியல் வழிமுறைகள் மற்றும் பெரும் அறிவியல் தரத்திட்டங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சியாளர்கள் வழங்கிய புதிய பங்களிப்பும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
1. Introduction of Artificial Intelligence

1. Introduction of Artificial Intelligence [செயற்கை நுண்ணறிவின் அறிமுகம்]

செயற்கை அறிவுத்திறன்
என்பது கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக்கொண்டு நுண் அறிவை உருவக்குகின்ற முறை ஆகும். மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாகுவதே இத்துறையின் நோக்கம். இத்துறை கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். தமிழில் செயற்கை அறிவுத்திறனை செயற்கை நுண்ணறிவு, செயற்கை அறிவாண்மை என்றும் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் அல்லது AI என்று சுருக்காக குறிப்பர்.

பல செயற்கை அறிவுத்திறன் நூல்கள் இத்துறையை "நுண்ணறிவு முகவர்களை ஆயும், வடிவமைக்கும்" துறை என வரையறுக்கின்றன. நுண்ணறிவு முகவர் என்பது தன் சூழ்நிலையை உணர்ந்து அதன் இலக்குக்கேற்ப தனது வெற்றி வாய்ப்புக்களுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பு ஆகும்.

இத்துறை மனிதர்களின் முக்கிய பண்பாண அறிவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவு எப்படி தொழிற்படுகிறது என்பதை துல்லியமாக அறிந்து, விபரித்து, இயந்திரங்களில் வடிவமைக்க முடியுமா என்பதை இத்துறை ஆய்கிறது. பகுத்தறிவு, இயந்திர கற்றல், திட்டமிடல், பார்வை, உணர்ச்சி, உள்ளுணர்வு, பொது அறிவு என பல முனைகள் செயற்கை அறிவுத்திறனுடன் இணைந்து வருகின்றன.